இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்கிக் கொள்வதால் இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியில் இயங்கி வரும் மரியன் அப்பாரல்ஸ் அடை தயாரிப்பு நிறுவனம் இஸ்ரேலுக்கு தேவையான ராணுவ சீருடைகளை தயாரித்து தர முடியாது என அதிரடியாக அறிவித்ததோடு ஒரு லட்சம் சீருடைக்கான ஆர்டரையும் ரத்து செய்துள்ளது.

இந்த நிறுவனம் தான் கத்தார், இஸ்ரேல், குவைத், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு தேவையான ராணுவ சீருடை தயாரித்துக் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.