இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்ட நபர்களை பணய கைதிகளாக பிடித்து சென்ற நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை தாய் மகள் என இரண்டு பெண்களை மனிதாபிமான அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர்.

இந்நிலையில் அவர்களைத் தொடர்ந்து மேலும் இருவரை ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்ய முன் வந்ததாகவும் ஆனால் இஸ்ரேல் அரசு அவர்களை ஏற்க மறுத்ததாகவும் ஹமாஸ் அமைப்பினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த இஸ்ரேல் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அனைவரையும் பத்திரமாக மீட்பது தான் எங்கள் ஒரே எண்ணம் என தெரிவித்துள்ளது.