அஜித்துடன் மஞ்சுவாரியர் நடித்திருக்கும் “துணிவு” படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் பைக் பயணம் மேற்கொள்ளும் அஜித் துணிவு சூட்டிங் சமயத்திலும் வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பைக்கில் சுற்றி வந்தார். இந்த பயணத்தின்போது மஞ்சுவாரியரும் அஜித் உடன் இணைந்திருந்தார். அஜித் உடன் லடாக் பகுதியில் பைக் பயணம் செய்த புகைப்படங்களை மஞ்சுவாரியர் தன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர் பேட்டி ஒன்றில் பேசியதாவது “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் நடிக்க ராஜூவ் மேனன் முதலில் என்னையே அனுகினார். அப்போது மலையாள திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்ததால் நான் அப்படத்தில் அடிக்க இயலவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.