பீகார் மாநிலம் சிவானில், காவல்துறைக்கே அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ரகுநாத்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, உதவி ஆய்வாளர் சுஜித் குமார் மற்றும் ‘டயல் 112’ அவசர கால பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் ஆகியோர் அந்தரங்கமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது.

ஒரு அறையின் வென்டிலேட்டர் வழியாக ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோவில், அறையின் பின்னணியில் காவல்துறை சீருடைகள் இருப்பதைக் காண முடிகிறது. இந்த வீடியோவை வைத்து மர்ம நபர்கள் சிலர் அந்த ஜோடியை பிளாக்மெயில் செய்து பணம் மற்றும் சலுகைகளைக் கேட்டு மிரட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்குத் தெரியவந்ததையடுத்து, ஏற்கனவே இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தனர். இருப்பினும், தற்போது வீடியோ பொதுவெளியில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், சிவான் எஸ்பி பூரன் குமார் ஜா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒழுக்கக் கேடாக நடந்துகொண்டதற்காக உதவி ஆய்வாளர் சுஜித் குமார் மற்றும் அந்த பெண் காவலரை உடனடியாகப் பணி இடைநீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இது ஒரு திட்டமிட்ட சதியா என்பது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.