அவசரம் ஆத்திரத்தைக் கொடுக்கும் என்பதற்கு உதாரணமாக, டெல்லி – ஆக்ரா இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரயில் நிலையத்தில் இருந்து வேகம் எடுக்கத் தொடங்கிய ரயிலில், நடைமேடையில் ஓடி வந்து அந்தப் பெண் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி இரண்டு முறை கீழே விழுந்தும், பிடிவாதமாக மீண்டும் எழுந்து ஓடி ரயிலுக்குள் குதித்துள்ளார்.
தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே விழுந்து உயிர் போகும் அபாயம் இருந்தும், அந்தப் பெண் செய்த இந்த விபரீதச் செயல் அங்கிருந்த பயணிகளை அலற வைத்தது.
@gharkekalesh pic.twitter.com/YRUnvDFBOj
— Arhant Shelby (@Arhantt_pvt) March 1, 2026
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ஒரு ரயிலைத் தவறவிட்டால் அடுத்த ரயிலில் போகலாம், ஆனால் உயிரைத் தவறவிட்டால் என்ன செய்வீர்கள்?” என அந்தப் பெண்ணின் முட்டாள்தனமான செயலைச் சாடி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதோடு, இது போன்ற செயல்கள் உயிருக்கே உலை வைத்துவிடும் என ரயில்வே அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
