148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, நட்சத்திர வீரர் பாபர் அசாம் பெரும் ஏமாற்றத்தைத் தந்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில், பாபர் அசாம் 18 பந்துகளைச் சந்தித்து வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இவரது ஸ்ட்ரைக் ரேட் (83.33) தான் இப்போது இணையத்தில் ஹாட் டாபிக்.
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) February 7, 2026
நெதர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் ரோலோஃப் வான் டெர் மெர்வ் வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்ற பாபர், ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாமல் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் தோற்றுவிடும் என நினைத்தபோது, கடைசி நேரத்தில் ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 29 ரன்கள் விளாச, 3 பந்துகள் மீதமிருக்க பாகிஸ்தான் தப்பிப் பிழைத்தது.
