சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஹெலிபேடில் இருந்துப் புறப்படும் ஒரு ஹெலிகாப்டரை, திடீரென அங்கு வரும் ஒரு யானை தன் துதிக்கை மூலம் பிடித்து இழுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆக்ஷன் திரைப்படக் காட்சியைப் போன்றப் போராட்டத்தைக் கண்ட இடத்தில் இருந்தவர்கள் பயத்தில் உறைந்து போயினர். யானை ஹெலிகாப்டரை முழு பலத்துடன் கீழே இழுக்கப் பார்க்கிறது, அதே சமயம் விமானி அதை மேலே செலுத்தப் போராடுகிறார்.
இந்தக் கடுமையான இழுபறி நீண்ட நேரம் நீடிக்கிறது. ஒரு கட்டத்தில், ஹெலிகாப்டர் முழு பலத்துடன் மேலே எழும்ப, யானை விடாமல் காற்றில் தொங்குவது போன்றக் காட்சி மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
View this post on Instagram
எனினும், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்துச் சமூக வலைதளங்களில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. தொழில்நுட்ப ரீதியாக ஒரு ஹெலிகாப்டர் யானையை இப்படி மேலேத் தூக்குவது கடினம் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். இந்த வைரல் வீடியோ, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) உதவியுடன் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.
