இணையத்தில் புயலாகப் பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் @awwwnchal என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு பெண் ஆர்வத்துடன் டைசன் நிறுவனத்தின் 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹேர் ட்ரையரை அன்பாக்ஸ் செய்கிறார்.
ஆனால், இதைப் பார்த்த அவரது அம்மாவின் எதிர்வினை, இணையவாசிகளை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டது. “கஜப் பேய்ஜதி ஹை யார்!” என்று கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளியுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், பெண் உற்சாகமாக ஹேர் ட்ரையரை காட்ட, அம்மா கேட்கிறார், “எவ்வளவு விலை?” பதிலாக “50,000 ரூபாய்” என்று கேட்டவுடன், அம்மாவின் முகத்தில் தோன்றிய கிண்டல் புன்னகை அட்டகாசம்.
“உன் தலையில் இவ்வளவு முடி கூட இல்லையே, இதுக்கு இவ்வளவு செலவு பண்ணியிருக்க!” என்று ஒரே போடாக போட்டு, மகளின் பேச்சை அடைத்துவிட்டார்.
இந்த அம்மாவின் கிண்டல், நெட்டிசன்களை கலகலப்பாக்க, சிலர் அம்மாவை “அதிகாரப்பூர்வ பொருள் விமர்சகர்” என்று கூட அழைக்கின்றனர். “50,000 சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சமாவது பயம் இல்லையா?” என்று ஒரு நெட்டிசன் கேட்டிருக்க, மற்றொருவர் “ஆன்ட்டி ரோஸ்டிங்கில் ஆஸ்கர் கொடுக்கலாம்!” என்று புகழ்ந்துள்ளார்.
