சமூக வலைதளங்களில் வைரல் ஆக வேண்டும் என்ற ஆசை, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு உணவு பதிவரின் உயிரையே பறித்துள்ளது. பிலிப்பைன்ஸின் புவேர்ட்டோ பிரின்செசா பகுதியைச் சேர்ந்த எம்மா அமித் என்ற பெண், தனது நண்பர்களுடன் காட்டுப் பகுதிக்குச் சென்று ‘டெவில் நண்டு’ (Devil Crab) என்று அழைக்கப்படும் ஒரு வகை விஷ நண்டுகளைப் பிடித்துள்ளார்.

அந்த நண்டுகளைச் சமைத்துச் சாப்பிடுவதை வீடியோவாகப் பதிவு செய்த அவர், அதில் மிகவும் மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டு அந்த நண்டைக் கடித்துச் சாப்பிடுகிறார். ஆனால், சாப்பிட்ட சில மணிநேரங்களிலேயே நண்டின் விஷம் அவரது ரத்தத்தில் கலந்து உடல்நிலை மோசமானது.

“Is this a bizarre desire for likes?”… A food influencer’s stupid act… A bizarre incident caused by poisonous crabs… A shocking video that goes viral.!!

கடுமையான வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்மா, சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 6-ம் தேதி உயிரிழந்தார். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவரான எம்மாவுக்கு, அந்த நண்டுகள் விஷமானவை என்று தெரிந்தும், வியூஸ்கள் (Views) பெற வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு விபரீத முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.