மும்பை கண்டிவிலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து மாற்றுத்திறனாளி பூனை ஒன்று கீழே வீசிக் கொல்லப்பட்ட சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தினத்தன்று நடைபெற்ற இந்த மனிதாபிமற்ற செயல் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
அதில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஒருவர், ஆதரவற்ற அந்தப் பூனையை இரக்கமின்றி பிடித்து ஜன்னல் வழியாக வெளியே வீசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. சுமார் ஏழு மாடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த அந்தப் பூனை, சிறிது தூரம் நொண்டியபடி சென்று பின்னர் உயிரிழந்துள்ளது.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அந்தப் பகுதியில் பூனைகளுக்கு உணவளிப்பவர்கள் மற்றும் விலங்கு நல அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பூனையைத் தூக்கி வீசிய காவலாளியை தற்போது காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
