திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இங்கு வெகு சிறப்பாக இதுவரை கிட்டத்தட்ட 40 மாவட்டங்களுக்கு  சுற்றுப்பயணம் செய்து, இந்த செயல் திருக்கூட்டத்தை நடத்தி இருக்கின்றோம் . எல்லா மாவட்டத்தையும் விட,  மிக எழுச்சியாக….  நாமக்கல் மாவட்ட செயல் வீரர் கூட்டத்தை  மாவட்ட கழக செயலாளர்கள், அருமை சகோதரர் ராஜேஷ் குமார் அவர்களும் – அருமை சகோதரர் மதுரா செந்தில் அவர்களும் மிகுந்த எழுச்சியோடு இந்த செயல் வீரர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.

நான் பேச்சுக்கு சொல்லவில்லை.  உண்மையாகத்தான் சொல்கிறேன். அதற்கு ஒரு உதாரணம் இந்த நிகழ்ச்சியின் உடைய நுழைவு வாயில்…. பல மாவட்டங்களில் நிகழ்ச்சி நடக்கும் போது நுழைவு வாயிலில் நம்முடைய அண்ணா அறிவாலயம் கழகத்தினுடைய தலைமையிடம் அண்ணா அறிவாலயம் புகைப்படம் இருக்கும்….  அதுபோல் அமைத்திருப்பார்கள்…  சில இடங்களில் நம்முடைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல எல்லாம் அமைத்து இருப்பார்கள்.

ஆனால் முதல்முறையாக இது இளைஞர் அணி நிகழ்ச்சி… இளைஞர் அணி மாநாட்டிற்காக நடக்கக் கூடிய நிகழ்ச்சி என்பதால்,  சென்னை சென்னையில் இருக்கக்கூடிய இளைஞரணியின் தலைமை அலுவலகம் அன்பகத்தை முதல் முறையாக இங்கு அமைத்திருக்கிறோர் திரு ராஜேஷ்குமார் அவர்கள்….  இன்னும் சொல்லப்போனால்,  இந்த நிகழ்ச்சியே ஒரு  மினி மாநாடு போல மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.