புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நாம தமிழ் தேசம் பேசுறோம்…  தமிழ் தேசிய பேசுறோம்….  தமிழர்கள் நாங்க…. தமிழ்  எங்க தேசியம்…  நாடு தமிழ்நாடு…. தேசம் தமிழ் தேசம்….  இங்கு வாழ்கின்ற மக்கள் எங்களுக்கு ஒரு அரசியல் இருக்கு. அந்த அரசியல் தமிழ் தேசிய அரசியல்,  நாங்க பேசுறோம்…

அப்ப என்டி ராமராவ் தெலுங்கு தேசம் என்று ஒரு கட்சி ஆரம்பிச்ச போது,  என்ன பண்ணிட்டு இருந்த நீ ? அவர் தெலுங்கு தேசம் பேசும்போது என்னையா இந்திய நாட்டுக்குள்ள…  இந்திய தேசத்துக்குள்ள தெலுங்கு தேசம் அப்படின்னு ஒரு பயலும் கேட்கலையே… காங்கிரஸ் அவரோட கூட்டணி வச்சி இருக்கு. பிஜேபியும்  அவரோடு கூட்டணி வச்சிருக்கு….  ஆனா நான் மட்டும் பேசும்போது உங்களுக்கு வேப்பங்காயா கசக்கிறது ஏன் ? அப்போ என்ன தெரியுமா ? நாம  சரியா பேசுறோம்னு  தெரியுது….

நீங்க ஒன்னு தெரிஞ்சுக்கணும்…. தம்பி,  தங்கைகள் நாம   ஒண்ணுல இருந்து ஆரம்பிக்கணும். இந்த விளையாட்டை ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கணும்.  நீங்க ஒன்னு முடிவு பண்ணிக்கோங்க,  நமக்கு எதுவுமே கிடையாது…  எல்லாம் அடிச்சு முடிக்கப்பட்டிருச்சு, நீங்க ஒன்ன உணர்ந்து கொள்ள வேண்டும்.  நீங்களும்,  நானும் அடிமைகள்.  அண்ணல் அம்பேத்கர் நமக்கு என்ன சொல்கிறார் என்றால்,  ஒருத்தன் அடிமையா இருக்கிறான் என்பதை உணர்த்திவிடுடா ? பிறகு அவனே கிளர்ச்சி செஞ்சி போராடுவான்னு சொல்லிட்டாரு என தெரிவித்தார்.