வட மாநிலத்தில் மக்கள் மத நல்லிணக்கத்தோடு இருக்கிறார்கள். பிரச்சனை வரும் போது பிரதமர் மோடி அவர்கள் அதற்கு சரியான பதிலடி கொடுக்கிறார் என நீங்கள் நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,

மோடி டெய்லி என்ன பண்றாருனு நான் பாத்துட்டு இருக்கல.  அது என்னுடைய வேலை மட்டும் கிடையாது. என்ன நடக்கிறது ? நீங்க இப்போ வடமாநிலத்துல பிரச்சனை இருக்கிறதா ? இல்லையா ? என்று அலசுவது உங்களுக்கே தெரியும்.  என்னை ஏன் கேட்கிறீர்கள்?  பத்திரிக்கையாளர் என்பதால்  என்னை கேட்கிறீர்களா ?

எல்லா இடத்திலும் பிரச்சனை நடக்க தான் செய்யும்.  எப்படி சால்வ் பண்றீங்கன்றது தான் முக்கியம்?  அதனால மத நல்லிணக்கம்  ஒன்றாக இருக்கணும்ன்றது தான் பாடுபடனும்னு நினைக்கிறவன் நான். அதனால அப்படி நடக்கும் போது அவர்கள் தட்டி கேட்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் அவ்வளவுதான் என பேசினார்.

சமத்துவ மக்கள் கட்சிக்கு தனித்துவமா தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்கிற இலக்கு உண்டா என்ற கேள்விக்கு பதில் அளித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், 

லைஃப்ல என்ன வேணாலும் நடக்கலாம்…. உலகத்துல என்ன வேணாலும் நடக்கலாம்… உறுதியோடு பயணிச்சா?  ஆமை,  முயல் கதை தானே…..  ஆமை எப்படி ஜெயித்தது ? முயல் ஆஹா நான் தான் வெற்றி பெறுவேன் என்று ஓடிப்போய் ஒரு இடத்தில் ரெஸ்ட் எடுத்தது….  ஆமை போயிருச்சுல்ல…  ஆனால்  நான் ஆமைன்னு என்னை  சொல்லிக்கல…  ஆனால் முயற்சி எடுக்க வேண்டும்…  உறுதி இருக்க வேண்டும்…  போய் எல்லையை அடைய வேண்டும் என்று பயணித்துக் கொண்டிருப்பேன். அதில் வெற்றி ஒருநாள் நிச்சயமாக வரும் என்று நான் சொல்கிறேன்.