உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் வாயில்லா ஜீவனான தெருநாய் ஒன்றிற்கு வாலிபர் ஒருவர் வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நாய் தப்பிக்க முயன்றபோதும், அதன் வாயைப் பிடித்துக் கொண்டு கொடூரமான முறையில் மதுவை குடிக்க வைத்துள்ளார். இந்த மனிதாபிமானமற்ற செயலை அங்கிருந்த அவரது நண்பர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாகி பெரும் கண்டனங்களை எழுப்பியது.

வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அந்த வாலிபரைக் கண்டறிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது போதையில் செய்த கேலிக்கூத்து ஒரு வாயில்லா ஜீவனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்ததால், அந்த வாலிபர் மீது விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்தச் சம்பவம் மனிதநேயம் மரித்துப்போன ஒரு அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.