ஐபிஎல் 2024க்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைத்துள்ள அனைத்து வீரர்களின் பட்டியல்..

ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ள, தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2024க்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைத்துள்ள அனைத்து வீரர்களின் பட்டியல் இங்கே :

சஞ்சு சாம்சன் (சி), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா.

வெளியிடப்பட்ட வீரர்கள் பட்டியல்:

ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்திப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி. கரியப்பா, கே.எம்.ஆசிப்.