ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியிட்டுள்ள, தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்கிறார் என தகவல்கள் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படி இல்லை என்பது தெளிவாகிறது. நவம்பர் 24 – ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்தார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது நவம்பர் 26 – ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் தக்கவைத்தது.

வெளியிடப்பட்ட வீரர்கள்:

யாஷ் தயாள், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ஷுப்மான் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா