சென்னை – குஜராத் அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி  நாளை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மைதான ஊழியர்கள் மைதானத்தை  மூடி வைத்துள்ளனர். இந்த மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான இறுதிப்போட்டி நடைபெறும் நேரத்தில் மழை கொட்டி தீர்த்து வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இதனையடுத்து இறுதிப்போட்டி இரவு 9:35 க்கு பின்  தொடங்கினால் ஓவர் குறைக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.. தொடர்ந்து மழை பெய்வது நின்ற நிலையில், மைதானத்தில் உள்ள தார்பாயை ஊழியர்கள் எடுத்து மைதானத்தை தயார்படுத்தினர். ஆனாலும் மழை தொடர்ந்து பெய்தது.. இதனிடையே போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை இன்று போட்டி ரத்து செய்யப்பட்டால் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை – குஜராத் அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி  நாளை இரவு 7:30 மணிக்கு நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இன்று நடக்கவிருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்..