ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை குவித்தது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் மழை பொழிந்தனர். அவர்கள் 18 Four, 22 Sixer என விளாசி நடப்பு  ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 99 சிக்ஸ் அடித்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த போட்டியின் வெற்றியை தொடர்ந்து ஹைதராபாத் அணி தற்போது புள்ளி பட்டியலில் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து கொல்கத்தா, சென்னை, குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். மேலும் பெங்களூர் அணி ஒரே ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.