10 அணிகள் கலந்துகொண்ட 16-வது IPL கிரிக்கெட் திருவிழா சென்ற மார்ச் 31-ஆம் தேதி துவங்கியது. அன்றில் இருந்து தினசரி இடைவிடாது ஆட்டங்கள் நடைபெற்று வந்தது. நேற்று இரவு 70வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் அரங்கேறியது. லீக் சுற்று நிறைவடைந்த சூழலில், போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

இதையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் நாளை (மே,.23) நடக்கும் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கிறது. அதன்பின் 24-ஆம் தேதி வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகளானது சந்திக்கிறது.