உத்தராகண்டம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் நடுத்தர தூரம் மற்றும் நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடுகிறார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கான இந்தியத் தடகள அணியில் இவர் இடம் பெற்றார்.

இந்நிலையில் இஸ்ரேலில் சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்திய வீராங்கனையான அங்கிதா தியானி மகளிருக்காண 2000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் 6 நிமிடம் 13.92 வினாடிகளில் இலக்கை எட்டி முதல் இடத்தை பிடித்தார். இதனால் அவர் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.