
இன்டோர் பகுதியில் வாழ்ந்து வரும் வாலிபர் ஒருவர் தனது தந்தையிடமிருந்து பணத்தைப் பெற நாடகமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இண்டோர் பகுதியில் 24 வயதான சதீஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். ஆடம்பர பழக்கங்களை கொண்ட இவர் மீள முடியாத கடன் சூழலில் சிக்கி தவித்து வந்துள்ளார். இதற்காக தனது தந்தையிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை பெற திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி தனது நண்பர்களான ஆருஷ் அரோரா மற்றும் தேஜ்வீர் சிங்க் சந்துவுடன் இணைந்து தந்தை ஸ்ரீராம் குப்தாவிற்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனது தந்தையிடம் தன்னை கடத்தி விட்டார்கள் என்றும், அதற்காக 1 லட்சம் ரூபாய் கேட்கிறார்கள் என்றும் போலியாக நாடகமாடியுள்ளார். ஆனால் அவருடைய தந்தை இதனை உண்மையென நம்பி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவருடைய மகன் தன் நண்பர்கள் மூலமாக கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஆடம்பர வாழ்க்கையின் மீது கொண்ட மோகத்தின் காரணமாக சதீஷ் கடனில் சிக்கியதும், அந்த கடனை அடைப்பதற்காகவே தன்னுடைய தந்தையிடம் நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்தது.
அதோடு இவர் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் தற்போது அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.