தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது டீம் இந்தியா. இதில் ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்ற கைப்பற்றிய நிலையில், டி20ஐ தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளும் இப்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.

இந்நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 2 மணிக்கு தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங்செய்து வருகிறது. கேப்டன் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்கி ஆடி வருகின்றனர். இந்திய அணியில் முதுகுவலி காரணமாக ரவீந்திர ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. ரவி அஸ்வின் விளையாடுகிறார். அதேசமயம் இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார் பிரசித் கிருஷ்ணா.

இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் திணறி வருகிறது. ஆனால் இந்த முறை இந்திய ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருமா? தென்னாப்பிரிக்க மண்ணில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் லெவன்  :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்,  கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் லெவன் :

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், எய்டன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, கைல் வெர்ரைன் (வி.கீ).