தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இன்னும் 34 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை நிறைவு செய்வார் சுப்மன் கில்..

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. தற்போது அனைத்து ரசிகர்களின் பார்வையும் டெஸ்ட் தொடரின் மீது பதிந்துள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியால் ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே செஞ்சுரியன் பார்க்கில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் டெஸ்ட் தொடரில் தனது பெயரில் சாதனையை படைக்க முடியும்.

கில் சிறப்பான ஃபார்மில் உள்ளார் :

இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 3 வடிவங்களிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். மேலும் 2023 ஆம் ஆண்டில், அவர் அணியின் மிகப்பெரிய வெற்றியாளராக உருவெடுத்தார். கில் ஒருமுறை கிரீஸில் இருந்தால், அவரைத் தடுப்பது கடினம். தற்போது சிறப்பான ஃபார்மில் கில்  இருக்கிறார்.

இந்த சாதனையை செய்ய முடியும் :

2019 ஆம் ஆண்டு ஒருநாள், 2020 ஆம் ஆண்டு டெஸ்ட், 2023ல் டி20ஐயிலும் இந்திய அணிக்காக சுப்மன் கில் அறிமுகமானார். அதன் பின்னர், அவர் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு முக்கிய இணைப்பாக மாறினார். இதுவரை இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் உட்பட 966 ரன்கள் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இன்னும் 34 ரன்கள் எடுத்தால், கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை நிறைவு செய்வார். கில் இந்தியாவுக்காக 44 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, அதில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் 12 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட் ஆகியோர் தலைமையில் தான் தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அபிமன்யு ஈஸ்வரன், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா மற்றும் கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்).