டி20 உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது..

8வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டு பிரிவுகளாக 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 5 அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணி இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு கேப்டவுனில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பந்து வீச இருக்கிறது. இந்திய தொடக்க வீரரும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா, பயிற்சி ஆட்டத்தின் போது இடது விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளாததால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய மகளிர் அணியின் ஆடும் லெவன் : 

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ராதா யாதவ், ரேணுகா சிங் தாக்கூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கெய்க்வாட்,

பாகிஸ்தான் மகளிர் அணியின் ஆடும் லெவன்  :

பிஸ்மா மரூஃப் (கேப்டன்), அய்மென் அன்வர், அலியா ரியாஸ், ஆயிஷா நசீம், பாத்திமா சனா, ஜவேரியா கான், முனீபா அலி, நஷ்ரா சந்து, நிடா தார், சாடியா இக்பால், சித்ரா அமின்.