இந்திய கேப்டன் ஹர்மானும், பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மாவும் போட்டியின் பதற்றத்தை ஒதுக்கி வைத்து சிரித்தபடி சேலஞ்ச் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் 4வது போட்டி தொடங்க இன்னும் சிறிது நேரங்களே உள்ளன. அதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் போட்டி உயர் மின்னழுத்த போட்டி என்பது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். ஆட்டம் ஆடுவதற்கு முன் இரு அணிகளுக்கும் அழுத்தம் இருப்பதை ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் பார்த்திருக்கிறோம்.

ஆனால் தற்போது ஹர்மானும், பிஸ்மாவும் போட்டியின் பதற்றத்தை ஒதுக்கி வைத்து சிரித்தபடி இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பாகிஸ்தான் அணித்தலைவர் பிஸ்மா மரூப் ஆகியோரின் வீடியோ போட்டிக்கு முன்னர் வெளியாகியுள்ளது. இரண்டு கேப்டன்களும் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. வீடியோவில், பிஸ்மாவும் ஹர்மன்ப்ரீத்தும் ஒட்டி நின்று சேலஞ்ச் செய்து கொண்டு கையை தூக்கி பாங்க்ரா ஸ்டேப் போடுவதை காணலாம். இவர்கள் இருவரும் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்றைய ஞாயிறு சூப்பர் ஞாயிறு மற்றும் போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்கும். உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் (பி பிரிவு) உள்ளன. மேலும் அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. முதல் போட்டியில் வெற்றி பெறுவது யார் என்பதில் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன் 6 முறை டி20 உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில் 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.இப்போது இந்திய அணியின் முக்கிய வீராங்கனையான ஸ்மிருதி மந்தனின் காயம்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவாரா என்ற குழப்பம் நிலவுகிறது. விளையாட வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது.

2023 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி : 

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே.

2023 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் மகளிர் அணி :

பிஸ்மா மரூஃப் (கேப்டன்), அய்மென் அன்வர், அலியா ரியாஸ், ஆயிஷா நசீம், சதாப் ஷமாஸ், பாத்திமா சனா, ஜவேரியா கான், முனீபா அலி, நஷ்ரா சந்து, நிடா தார், ஒமைமா சொஹைல், சாடியா இக்பால், சித்ரா அமின், சித்ரா நவாஸ், துபா ஹசன்.