இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். அதன் பின் அவர் பொதுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, நமது விவசாயிகளின் நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர். சிந்துநதி நீரில் இந்திய விவசாயிகளுக்கு உரிமை உள்ளது.

70 ஆண்டுகளாக இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். சுதந்திரத்திற்கு பின்னர் வறுமை என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. தற்போது அனைவரும் உணவு பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நியாயமற்றது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். சிந்து நதிநீர் இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது. அதை யாருக்கும் விட்டுத்தர முடியாது. எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. அதனால் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என்றும் தெரிவித்துள்ளார்.