ஜப்பான் நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிக்கி ஆசியா தெரிவித்தது யாதெனில் “வரும் மார்ச் 19ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு புமியோ கிஷிடா இந்தியாவுக்கு வர உள்ளார்.

மேலும் அவர் இந்த ஆண்டு ஜி 20 மற்றும் ஜி 7 மாநாட்டின் தலைவர்களான புதுடெல்லியும் டோக்கியோவும் இணைந்து செயல்படுவார்கள் என்பது குறித்து மோடியுடன் உறுதிப்படுத்த புமியோ கிஷிடா ஆர்வமாக இருக்கிறார். மேலும் மே மாதம் ஜி 7 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கும் படி அத்தகைய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்த புமியோ கிஷிடா ஆர்வமாக இருக்கின்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.