உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றது.

மேலும் அந்நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனுக்கு தேவையான புதிய ராணுவ உதவிகளை வெள்ளை மாளிகை இன்று தெரிவிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தது. அதேபோல் உக்ரைனுக்கு தேவையான 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி உள்ளது.