இங்கிலாந்தில் மூலம் மூலம் பரவும் அபூர்வ நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தென் அமெரிக்காவில் மட்டுமே பரவி வந்தது.  இங்கிலாந்தில் முதல் முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு இந்த பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூனையின் உடலில் உருவாகும் இந்த நோய் பாதிக்கப்பட்ட பூனையின் கீறல் அல்லது பூனை கடி மூலம் மனிதர்களுக்கு பரவும் என்றும் பிரேசில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்ட பூனை மூலம் இந்த நோய் பரவியுள்ளது எனவும் இங்கிலாந்து மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இந்த பூஞ்சை தொற்று எலும்புகளையும் மூட்டுகளையும் பாதிக்கலாம் என்றும் சிலருக்கு நுரையீரல் மற்றும் மைய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அந்த பூனையை வைத்திருக்கும் 64 வயது பெண் மற்றும் பூனையை பரிசோதித்த கால்நடை மருத்துவர் ஒருவர் என மூவருக்கு பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட மூவரும் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்துள்ளனர். இது பூஞ்சை தோற்று பொதுவானதாக காணப்பட்டாலும் எலும்புகளையும் மூட்டுகளையும் கூட பாதிக்கலாம். மேலும் சிலருக்கு நுரையீரல்கள் மற்றும் மைய நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட கூடும் எனவும் அதிர்ச்சி தகவலை கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.