நியூசிலாந்து குடியுரிமையை பெற்ற இந்தியர் ஒருவரின் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரல் வீடியோவில், அவர் முதலில் “India” என்ற எழுத்துக்கள் கொண்ட நீல டி-ஷர்ட்டை அணிந்திருப்பார். பின்னர் அதை அகற்றி, உள்ளே “New Zealand” டி-ஷர்ட் அணிந்திருந்தார். அவர்0 தனது குடியுரிமை மாற்றத்தைக் கொண்டாடுகிறார். அவரைச் சுற்றியிருந்தவர்கள் உற்சாக குரலுடன் ஆரவாரிக்க, கூடவே அதிகாரிகளும் இந்த நிகழ்வை ரசிக்கின்றனர். இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதுடன், குறிப்பாக இந்தியர்களிடையே பல்வேறு கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்தியாவை விட்டு வெளியேறுவதை ஒரு வெற்றி என பாராட்ட, மற்றவர்கள் “தாய்நாட்டை விட்டுச் செல்லும் போதும் மரியாதையை காப்பாற்ற வேண்டும்” என்று விமர்சிக்கின்றனர்.
ஒரு நெட்டிசன் “இந்தியாவில் மிகப்பெரிய சாதனை என்றால், அதுவே இந்தியாவை விட்டு வெளியேறுவதே” என கிண்டலாகக் கூறியிருக்கிறார். அதேசமயம், சிலர் “ஒரு நபர் இந்தியாவை விட்டுச் சென்றாலும், அவர் எப்போதும் இந்தியனாகவே இருப்பார்” என்று தேசிய உணர்வுடன் பதிலளித்துள்ளனர். இதன் நடுவில், நியூசிலாந்தில் வாழும் சில இந்தியர்கள் அந்த நாட்டில் வாழ்க்கை மிகவும் சலிப்பானது, உலகத்துடன் தொடர்பு இல்லாதது என்று கருத்து தெரிவித்து, அங்கு குடியேறுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பலருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
View this post on Instagram
