நாற்பதும் நமதே நாடும் நமதே என்று கடந்த 2022 ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் இந்த முழக்கத்தை முன் வைத்ததாகவும்,  அதை செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று இன்று இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக் கொண்டிருப்பதாகவும்,  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா நம் பக்கம் தான், ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மகத்தான வெற்றியை பெறுவோம். அதற்கேற்ற வகையில் வாக்குச்சாவடி களம் காணட்டும் என்ற ஒரு நீண்ட மடல் என்பது எழுதப்பட்டு இருக்கிறது.

சென்னை மண்டல பூத் கமிட்டி மீட்டிங் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூரில் நடைபெறக்கூடிய நிலையில், முதலமைச்சர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் எனும் புரட்சித்திட்டம், பேருந்தில் பெண்களுக்கான கட்டணம் இல்லாத பயணத்திட்டம், காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை எல்லாம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இளைஞர் அணி சார்பில் வரக்கூடிய டிசம்பர் 17ஆம் தேதி  மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. எனவே மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கம் இந்தியாவின் தென் திசையில் இருந்து எத்திசையில் பரவட்டும் என்ற வகையில் நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நீட்டுக்கான கையெழுத்து இயக்கம் மக்களிடம் வரவேற்பை பெற்று இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இது போன்ற ஒரு பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி தொண்டர்களுக்கு முதலமைச்சர் கட்சி ரீதியாக இந்த கடிதம் எழுதி இருக்கிறார். இந்தியா கூட்டணி வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் எனவும் அவர்  நம்பிக்கையுடன் தெரிவித்து இருக்கிறார்.