2023ல் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை வலது கை தொடக்க பேட்டர் சுப்மன் கில் பெற்றுள்ளார்.

2023 ஆசியக் கோப்பையின் கடைசி சூப்பர் 4 ஆட்டம் இந்திய அணிக்கும், வங்கதேசத்துக்கும் இடையே நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. எனினும் வங்கதேச அணி ஏற்கனவே இந்த போட்டியில் இருந்து வெளியேறி விட்டது. அதே நேரத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போது இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17ஆம் தேதி, அதாவது நாளை இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். டாஸ் இழந்து முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலக்கை துரத்திய இந்திய அணி 49.5 ஓவர்களில் 259 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 121 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் கூட துவக்க வீரரை ஷுப்மன் கில் உலக சாதனை படைத்துள்ளார். உலகில் எந்த வீரரும் செய்யாததை இந்த போட்டியில் கில் செய்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஷுப்மான் கில் மட்டுமே களத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் கில் சதம் அடித்தார். இதன்மூலம் தனது 5வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார் கில்.. ஆனால் இந்த சதத்தின் மூலம் கில் ஒரு பெரிய சரித்திரம் படைத்துள்ளார். ஏனெனில் இந்த சாதனையை உலகில் எந்த வீரராலும் செய்ய முடியவில்லை.

இந்தப் போட்டியில் மட்டுமின்றி, இந்த ஆண்டு முழுவதும் கில் அற்புதமான ஃபார்மில் இருந்து வருகிறார். இந்த போட்டிக்கு முன், கில் இந்த ஆண்டு 16 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் கில் 64.51 சராசரி மற்றும் 105 சராசரியுடன் 904 ரன்கள் எடுத்தார். வங்காளதேசத்திற்கு எதிராக கில் சதம் அடித்ததால், இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் கில் 1000 ரன்களை கடந்துள்ளார். இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். 2023ஆம் ஆண்டு 17 ஒருநாள் போட்டிகளில் 103 ஸ்ட்ரைக் ரேட்டில் 1025 ரன்கள் எடுத்துள்ளார். ஏனெனில் இதுவரை இந்த ஆண்டில் உலக அளவில் எந்த ஒரு வீரரும் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை எட்டியதில்லை.

அதேபோல் 2023ல் அனைத்து பார்மெட்டிலும் 1,500+ சர்வதேச ரன்களை (1559 ரன்கள்) எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் 2023ல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும்  அதிக சதங்கள் (6 சதம்) அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

 வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக நேரம் நிலைக்கவில்லை. இருப்பினும், அங்கு கில் ஒரு அற்புதமான ஷாட் ஆடினார். எனவே, உலகக் கோப்பையிலும் கில் அதே ஃபார்மைத் தக்கவைப்பாரா என்பதுதான் அனைவரின் பார்வையும் உள்ளது.