இந்தியாவில் கடந்த வருடத்தை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் அதிக அளவு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 3,34,804 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் 2,95,000 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது 13.5% வளர்ச்சியாகும். இந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமாக இருக்கும் மாருதி சுசுகி மே மாதத்தில் மட்டும் 1.78 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற வருடம் மே மாதத்தை விட 10% அதிக வளர்ச்சியாகும். இதற்கு அடுத்தபடியாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 59,601 கார்களை விற்பனை செய்து 16 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்னணு வாகனங்கள் உட்பட 45,984 கார்களை விற்பனை செய்துள்ளது.-