ஒடிசாவில் உள்ள பஹிநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்த நிலையில் 900- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு ரயில் ஒன்று ரயில் நிலையத்தின் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் நிறுத்தமிடமில்லாததால் மெயின் லைனுக்கு சிக்னல் கொடுக்க வேண்டியதாக இருந்தது.

ஆனால் கோரமண்டல் ரயிலுக்கு மாறாக லூப் லைன் சிக்னல் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து 128 கிலோமீட்டர் வேகத்தில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.