
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் வெற்றியான திட்டங்கள் ஏதும் இல்லை. இன்னைக்கு என இல்லை.. கருணாநிதி காலத்தில் ”பிச்சைக்காரர் மறுவாழ்வு” திட்டம் கொண்டு வந்தார். வெற்றியடைய முடியவில்லை. ”ரிக்ஸா ஒழிப்பு திட்டம்” கொண்டு வந்தார். வெற்றி அடைய முடியவில்லை. ”கண்ணொளி வழங்கும் திட்டம்” கொண்டு வந்தார், வெற்றியடைய முடியவில்லை.
ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும்…. அம்மா காலத்திலும் கொண்டுவந்த திட்டங்கள் அத்தனை திட்டங்களும் வெற்றி அடைந்தன. இன்றைக்கு இருக்கிறவர்கள் தன்னுடைய பெயரிலே கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய அப்பா பெயரில்… தங்கை பெயரில்…. அம்மா பெயரை வைப்பதற்காக மட்டுமே அவர்களின் திட்டங்கள் பயன்படுகிறன.
திமுக அரசு கொண்டுவந்த எந்த திட்டமும் முழுமையான வெற்றியை இதுவரை பெறவில்லை என்பது நாடறிந்த உண்மை. ஏதாவது ஒரு திட்டம்… முழுசா மக்கள் போற்றுகின்ற திட்டமாக இதுவரை எந்த திட்டங்களும் வழங்கப்படவில்லை. எல்லா திட்டமும் வெற்றிகரமான திட்டங்களாக அல்ல. ஆகவே இதனை மோசமான அரசாக தான் நாங்கள் கருதுகிறோம்.
குறிப்பாக தாலிக்கு தங்கம் கொடுக்க முடியவில்லை. இலவச ஸ்கூட்டர் கொடுக்க முடியவில்லை,அம்மா மினி கிளிக்கை முடி விட்டார்கள், சாதாரண மாணவர்களுக்கு மடிக்கணினி இன்னும் வந்து சேரவில்லை. மடிக்கணினி திட்டம் தான் இன்னைக்கு உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் என்று போற்றப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் புகழ பெற்றார்கள். அந்தத் திட்டத்தையும் இன்றைக்கு முடக்கி வைத்திருக்கிறார்கள். ஆகவே எல்லா திட்டத்தையும் முடக்கி வைத்துவிட்டு, புதிய திட்டங்கள் மிகச் சிறப்பான திட்டங்கள் அல்ல.
மகளிருக்கு கொடுக்கின்ற இலவச பேருந்து என்ற ”விடியல் திட்டமே” முழுமையா பயன் பெறவில்லை. இதற்க்கு வெள்ளை அறிக்கை கொடுத்தால் தான் அவர்கள் கொடுக்கிற கணக்கீட்டிற்கும்… மகளிர் இலவசமாக பயன்படுகிறதுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். இந்த திட்டத்திற்கு அரசு ஒதுக்குகின்ற பணம் அந்த பேருந்துக்கு ஒதுக்குகின்ற பணமே தவிர, அந்த திட்டத்திற்கு கொடுக்கின்ற பணம் இல்லை.ஒரு காலகட்டத்தில் அது மிகப்பெரிய உழலாக வெடிக்க இருக்கிறது என தெரிவித்தார்.