மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, என்னை மாணவ பருவத்தில்  காங்கிரஸ் கட்சிக்கு அழைத்தார்கள். பெருந்தலைவர் அழைப்புக்காக வரமாட்டேன், நான் திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே என்னை இணைத்துக் கொண்டேன். அறிஞர் அண்ணாவின் படையிலே சேர்ந்துவிட்டேன் என்று அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகத்தை உயிராக நேசித்த போது…  அந்த கட்சிக்காக உயிரையும் கொடுப்பதற்கு முடிவெடுப்பது தான் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றினேன்.

எத்தனை போராட்டங்கள் ?  எத்தனை நிகழ்ச்சிகள் ? பெருந்தலைவர் காமராஜர் அழைத்தார் என்பதற்காக நான் செல்லவில்லை. ஆனால் அண்ணாவின் மீது கொண்ட  பற்றின் காரணமாக நான் செல்லவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கலைஞர் அவர்களுக்கு உற்ற தம்பியாக இருந்தேன், அண்ணா மறைவுக்கு பிறகு… அண்ணா உயிர் போகிறபோது அடையாறு மருத்துவமனையிலேயே..  புற்றுநோய் மருத்துவமனையில் நான் இருந்தேன்.

எல்லோரும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். என்ன என்று கேட்டேன் ? அண்ணா இறந்துவிட்டார் என்று அங்குள்ள ஊழியர்கள் சொன்னார்கள். நான் அந்த அறைக்குள்ளே போனேன். டாக்டர்கள் அவருடைய உடல்களிலே பொருத்தப்பட்டிருந்த கருவிகளை  பிரித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு பக்கத்திலே எம்ஜிஆர் உட்கார்ந்திருந்தார்,  இன்னொரு பக்கத்திலே கலைஞர் உட்கார்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார், இன்னொரு பக்கத்திலே நாவலர் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார், அவர்கள் எல்லோரும் சேர்ந்து புறப்பட்டு அண்ணாவினுடைய நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு சென்றார்கள்.

நான் செல்வதற்கு வாகனம் ஏதுமில்லை. நான் நின்று கொண்டிருப்பதை பார்த்து டிவி நாராயணசாமி… எங்கள் பக்கத்து ஊருக்காரர் என்ன இங்கு நிற்கிறாய் ? வண்டி இல்லையா ? என்னுடைய காரிலே  வா என்று என்னை அழைத்துக் கொண்டு போனார். நான் அவரோடு சென்றேன். அங்கே எஸ்.எஸ்.ஆர் தலையில் தலையில் அடித்துக் கொண்டு…  என்னை வரச் சொன்னாரே ராஜி…  வந்துவிட்டு போவது என்று சொன்னாரே,  நான் போகவில்லையே..  என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தார் ? என்று எனக்கு தெரியவில்லையே…  என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டே  அந்த காரிலே  வந்தார்.

நாங்கள் அண்ணாவின் வீட்டிற்கு சென்றோம். அங்கே நடிகர்கள் சிவாஜி அவர்கள் அழுது கொண்டடே அண்ணாவினுடைய சடலத்துக்கு பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து  சொல்லில் செல்வர் இவிகேஎஸ்  சம்பத் அவர்கள் அங்கே வந்தார். அவர் தன்னுடைய கண்ணீரை சிந்தினார். பிறகு தலைவர்கள் வர ஆரம்பித்தார்கள். நான் நடந்தே விக்டோரியா விடுதிக்கு போய் சேர்ந்தேன். இது என்னுடைய வாழ்க்கையிலே..  அண்ணாவை நேசிப்பதற்கான காரணங்களில் பல காரணங்களிலேயே ஒன்று. அதன் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்திலே என்னை இணைத்துக் கொண்டு..  முழுமையாக பணியாற்றினேன்  தெரிவித்தார்.