நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை நாங்கள் ஆட்சிக்கு வரும்போது… மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும்போது… இந்தியா உலக பொருளாதார வல்லமை மிகுந்த நாடுகளில் மூன்றாவது இடத்திற்கு வரும் என்று நான் சொன்னேன்.

மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  இப்போது இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி ஏதாவது நம்பிக்கை இருந்தால் ? வருகின்ற ஐந்து ஆண்டுகளில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சிகள் என்ன செய்திருக்க வேண்டும் ? மோடி அவர்களே…  நீங்கள் எப்படி இதை செய்யப் போகிறீர்கள் ? நிர்மலா அவர்களே எப்படி நீங்கள் இதை செய்யப் போகிறீர்கள் ? என்று கேட்டு இருக்க வேண்டும். இதை கூட நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இல்லை என்றால் ? அவர்கள் ஏதாவது திருத்தங்கள் சொல்லலாம்.  மூன்றாவது முறை ஆட்சிக்கு வருவதை பற்றி பேசுகின்றார்கள்.

நாங்கள்  இந்தியாவை முதல் இடத்துக்கு கொண்டு வர  முயற்சி செய்திருக்கிறோம் என்று ஜனங்கள் இடத்தில் போய் சொல்லி இருக்கலாம்.  இவ்வளவு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகு ஒரு அனுபவம் இல்லாத மனிதர்கள் பேசுவது போல் இவர்கள் பேசுகிறார்கள்.  இந்த எண்ணத்தோடு தான் அவர்கள் இத்தனை நாள் தூங்கிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

எதுவுமே செய்யாமல் மேலே வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். எல்லாம் தானாகவே நடந்து விடும் என்றால் ? இதிலிருந்து நமக்கு புரிவது என்னெவன்றால் ? காங்கிரஸுக்கு ஒரு வழிமுறை இல்ல.  எப்படி செய்வோம் என்பதற்கான கொள்கை இல்லை ? அதை செய்வதற்கான வலிமையும் இல்லை. தூங்கிக் கொண்டிருக்கும் போது நடந்துவிடும் என்று தான் இவர்கள் நினைக்கிறார்கள் என தெரிவித்தார்.