ஒரே நாடு,  ஒரே தேர்தலை அறிவிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயின் அடுத்த நகர்வு இதுதானா ? முக்கியத்துவம் என்ன என்பது குறித்தெல்லாம் அடுத்தடுத்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா ? கட்சியை தொடங்குவாரா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் அவர் கட்சியை பதிவு செய்ய போகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் களத்தில் அவருக்கான சாத்தியங்கள்,  வாய்ப்புகள் என்ன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து பேசிய  அரசியல் விமர்சகர்கள், 2010ஆம் ஆண்டு விஜய்  ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.

அதிலிருந்து அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவதற்க்கான பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணங்களாக  தள்ளி போகின்றன. இந்த சூழ்நிலையில் தற்போது அவர் அரசியலுக்கு வருவது உறுதி என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூத்த நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய பல்வேறு அரசியல் ஆலோசகர்களிடம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசி இருக்கிறார்.

அப்படி பேசும்போது ஒரே நாடு,  ஒரே தேர்தல் என்று அறிவிப்பு வந்து,  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் – நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வந்தால் ? அதற்காக கட்சியை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றும்… அதற்க்கு முனைப்பு காட்டி வருகிறார்.  அதன் அடிப்படையில் வருகின்ற 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கூடக் கூடிய கூட்டத்தில் மத்திய அரசு ஏதாவது முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருக்கிறதா ? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி ஏதேனும் அறிவிப்பு வெளிவந்தால்…  கண்டிப்பாக அவர் தனது கட்சியை பதிவு செய்துவிட்டு,  அரசியலில் களம் காண்பார் என்பதுதான் கிடைத்திருக்க கூடிய தகவலாக இருக்கிறது.