எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். இந்த கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜி திரிணமூல் காங்கிரஸில் ஒரு மிக முக்கியமான தலைவராக…  அடுத்த கட்ட தலைவராக முன் நிறுத்தப்படுகின்றார். மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக அபிஷேக் பானர்ஜியை  தான் திரிணமூல் காங்கிரஸில் முன்னிறுத்துகிறது.

எனவே அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் கொடுத்துள்ளது. அபிஷேக் பானர்ஜி மீது பல்வேறு வருமானவரித்துறை இந்த மாதிரியான சோதனைகள் தொடர்ச்சியாக அபிஷேக் பானர்ஜி  சம்பந்தப்பட்ட இடங்களில் நடந்து வருகின்றது.”இந்தியா” கூட்டணியினர் வைக்கின்ற குற்றச்சாட்டு என்னவென்றால் ? இந்த மாதிரி கூட்டணி நிகழ்வுகள் எப்போதெல்லாம் நடக்கின்றதோ, அப்போதெல்லாம் தொடர் சோதனைகள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகின்றது. இதற்கும் காரணம் இந்தியா கூட்டணி நிகழ்வு இருக்கின்றது. முதல்வர் இந்தியா கூட்டணி நிகழ்வில் கலந்து கொள்ள எப்போதெல்லாம் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்கிறாரோ,  அப்போதெல்லாம் இந்த மாதிரியான சோதனைகள் நடைபெறுகின்றது என்பதுதான் திமுகவின் தரப்பு குற்றசாட்டாக இருக்கிறது. இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை பல்வேறு இந்தியா கூட்டணி கட்சியினரும்  வைக்கின்றனர்.

இந்த முறையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜிக்கு இந்த மாதிரியான நெருக்கடியை தான் தெரிவிக்கிறது. ஒரு பழிவாங்கும் அரசியலை பாரதிய ஜனதா கட்சி கையாளுகின்றது. அதற்கு அமலாக்க துறையை கையாளுகின்றது என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே அவரால் பங்கு பெற முடியவில்லை. மற்ற அனைத்து கட்சியினரும் இந்த கூட்டத்தில்பங்கு பெற்று இருக்கின்றார்கள்.  எனவே இந்த கூட்டத்தில் எந்த விதமான பிளவு இல்லை. காரணங்கள் அபிஷேக் பானர்ஜி  தவிர மற்ற அனைவரும் இந்த கூட்டணியில் கலந்து இருக்கின்றார்கள்.

அடிப்படையில் இந்த கூட்டணி கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் முதல் கட்டமாக கடக்க வேண்டிய  சவாலாக இருக்கின்றது. ஏனென்றால் பல்வேறு கட்சியினும்… பல்வேறு விதமான கருத்தியல் கொண்ட கட்சிகளாக  இருக்கின்றது. எனவே நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம் என்பது மக்களிடம் அவர்கள் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்  இருக்கின்றார்கள். அதை அவர்கள் தெரிவிக்கிறார்கள். அடுத்த கட்டமாக பாஜகவை எப்படி கையாளுவது என்ற ஒரு கேள்வி பாஜகவை எந்தெந்த மக்கள் பிரச்சனைகளில்  முன்னிறுத்தி பாஜகவை களத்தில் எதிர்கொள்வதை செய்து வருகின்றார்கள்.

ஊடகங்களில் எப்படி எதிர்கொள்வது  இப்படி மூன்று விதமான யுக்திகளை அவர்கள் கையாளுகின்றார்கள். கடந்த காலங்களில் சமூகவலைதள ஊடகங்களில் பாஜகவின் பலம் மிகப்பெரிய அளவில் இருந்தது. அதை முறியடிக்கும் விதமாக தற்போது இருக்கக்கூடிய இந்தியா கூட்டணியினர் பல்வேறு யுக்திகளை கையாளுகின்றார்கள். சமூக ஊடகங்களை கையாளுவதற்கு பல்வேறு விஷயங்களை ஒரு பிராண்டிங் போன்ற விஷயங்களை அவர்கள் கையில் எடுக்கிறார்கள்.

அந்த பிராண்டிங் சம்பந்தமாக தான் இந்த கூட்டணிக்கு  I.N.D.I.A என்ற பெயரை  வைத்துள்ளார்கள். அப்படி வைத்திருக்கும் போது, ஹிந்தியில் இருந்த ”பாரத்” என்ற இந்தியா பெயரை ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக அரசாங்கம் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றது. எனவே இந்தியா கூட்டணி என்பது மக்களிடம் சென்று சேருகிறது என்ற உணர்வை இந்த கூட்டணி  கட்சியினர் பெற்று இருக்கின்றார்கள்.