
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய தலைமை தமிழகத்துல 9 இடங்களுக்கு ஸ்பெஷல் கவனம் கொடுக்குறாங்க என்பதை தாண்டி, அந்த 9 தொகுதியை விட முக்கியமான தொகுதிகள் வெளியே இருக்கு. எனவே அந்த 9 தொகுதியை பாரதிய ஜனதா கட்சி போகஸ் பண்ணல.
அந்த 9 தொகுதி எதுக்குன்னா, அதை சிறப்பு கவனம் கொடுத்து, இன்னும் இம்ரூவ் பண்ண வேண்டும். இந்த 9 தொகுதிகளை விட வெளியே சிறப்பாக நிறைய தொகுதிகளில் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கான உள்கட்டமைப்பு இருக்கு. எங்களின் நோக்கம் 9 தொகுதி கிடையாது. இன்னொரு 10 நாளில் பாப்பிங்க.
அதே வேலையை 39 தொகுதிகளும் செய்ய போறோம். அதே வேலையை 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், 39 தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள் வருவாங்க, பாப்பாங்க. எலெக்ஷன்க்கு தயார் படுத்துறது தான். வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு 7 – 8 மாதங்கள் இருக்குறதனால, அது இன்னைக்கு முக்கிய நோக்கம் இல்லை. today it’s not a important .
இன்னைக்கு நம்மளுடைய நோக்கம், இவங்கதான் வேட்பாளர். இவங்க இப்படி ? பார்மேசன் எப்படி ? சேப் என்ன ? அது பேச கூடிய நேரம் இன்னைக்கு இல்லைங்க. நாள்கள் அதிகம், அரசியல் சூழல் மாறும், கள சூழல் மாறும். இன்னும் வரைக்கும் 5 மாநில தேர்தல் முக்கியம் என தெரிவித்தார்.