செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ், தெய்வத்திருமகன் தங்க கவசம் என்பது…. எங்களை போன்றவர்கள்  கடவுளாக நேசிக்கக்கூடிய…  ஒரு கடவுளாக பூசிக்கக்கூடிய ஒருவராக… நாங்கள் ஒரு சித்தராகத்தான் அவரை வழிபடுகிறோம். அதை உணர்ந்ததின் காரணமாகத்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்,  ஐயா அவர்களுக்கு தங்கத்திலே கவசம் வைத்தார்கள்.

கடவுளுக்கும் மட்டும் சாத்தப்படக்கூடிய அந்த தங்க கவசம், ஐயா சித்தர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சாத்தப்பட்டத்துடைய நோக்கமும் அதுதான். ஆனால் அந்த தங்க கவசம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கட்சியின் சார்பாக நிறுவப்பட்டதால்,  அதை உரிமை கோருவது, அந்த கட்சியிலே இன்றைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய நிர்வாகிகளுக்கு தான் சாரும்.

அந்த விதத்திலே இன்றைக்கு அந்த கட்சி… அந்த கட்சியினுடைய தலைமை…. அந்த கட்சியினுடைய பொருளாளர் போன்ற பதவிகள் எடப்பாடி தலைமையிலான நிர்வாகத்தில் இருக்கின்ற காரணத்தினால்,  அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரை பசும்பொன் முத்துராமலிங்க தேவருடைய விடயத்திலேயே.. விஷயத்திலே… எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும்,  எந்த ஒரு அரசியலுக்கும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். முக்குலத்தோர் புலிப்படையின் நிலைப்பாடு இது தான் என தெரிவித்தார்.