தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சசிகலாவின் அடுத்த கட்ட நகர்வு குறித்து மிக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலாவை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அரசு தலைமை கொறடா நரசிம்மன், புதிய கட்சி தொடங்குவது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் சசிகலா தனது இறுதி முடிவை அறிவிப்பார் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் கசிந்து வரும் நிலையில், அதிமுக-வை மீட்டெடுக்கப் போகிறாரா அல்லது புதிய பாதையைத் தொடங்கப் போகிறாரா என்ற  கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கப்போகிறது.

இந்தச் சந்திப்பு போயஸ் கார்டனில் நடந்துள்ளதால், ஜெயலலிதா பாணியில் ஒரு புதிய அரசியல் இன்னிங்ஸை சசிகலா தொடங்குவார் என்ற பேச்சும் அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தைக் கிளப்பியுள்ளது.