தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மேற்கு மண்டலமான கொங்கு பெல்ட்டில் அதிமுக தனது பிடியை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவையில், அக்கட்சியின் முக்கியப் புள்ளியான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை, ‘கொங்கு தமிழர் எழுச்சி பேரவை’ அமைப்பினர் நேரில் சந்தித்துத் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கக் கடுமையாக உழைப்போம் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

ஏற்கனவே பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ள இபிஎஸ்-க்கு, இது போன்ற சிறிய அமைப்புகள் மற்றும் மண்டல வாரியான கட்சிகளின் ஆதரவு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.

திமுகவின் கோட்டையைத் தகர்க்க கொங்கு மண்டலத்தில் வேலுமணி மூலமாக இபிஎஸ் போட்டுள்ள இந்த ‘சைலண்ட்’ ஸ்கெட்ச், மற்ற கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.