சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய நிதி உரிமை…  நம்முடைய ஜி.எஸ்.டி பணத்தையும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. வரி பகிர்வு 2014-இல் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்தியது 5 லட்சம் கோடி. ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு திருப்பி தந்தது எவ்வளவு தெரியுமா ? வெறும் ரெண்டு லட்சம் கோடி.

நம்முடைய தமிழ்நாட்டுக்கு இந்த நிலைமை என்றால்,  உத்தர பிரதேசம் பாருங்க….  உத்திரபிரதேசம் பாஜக அரசு என்ன பண்ணுதுன்னா.? உத்திரபிரதேசம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி மூன்று லட்சம் கோடி. அதே உத்திரப்பிரதேசத்துக்கு ஒன்றிய அரசுக்கு திருப்பி தந்த  பணம் ஒன்பது லட்சம் கோடி. அதேபோல சமீபத்தில் ஜி.எஸ்.டி வரியை பகிர்வு பண்ணி கொடுத்தாங்க.

தமிழ்நாடு சென்ற வருடம் ஜி.எஸ்.டி-யாக  கொடுத்தது 24 ஆயிரம் கோடி.. ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு திருப்பி கொடுத்தது வெறும் 2000 கோடி. நம்முடைய நிதி உரிமை விட்டுக் கொடுத்திருக்கிறோம்.  கல்வி உரிமையை விட்டுக் கொடுத்திருக்கிறோம்.

இந்த அத்தனை உரிமைகளை மீட்பதற்காகத்தான் வரும் 2024 மிக மிக முக்கியமான தேர்தல்… நாடாளுமன்றத் தேர்தல்… தலைவர் சொல்லி இருக்கிறார்…. இந்தியாவை காப்பாத்தணும்னா…?  நம்முடைய இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால்,  நமது இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு முன்னோட்டமாக தான் இந்த சேலம் மாநாடு நடக்க இருக்கின்றது என தெரிவித்தார்.