தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் நாளை (டிசம்பர் 8) பணி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.