
வாடகை வாய்கள், வலையொளிக்காரர்கள் எல்லாருமே திராவிடர்களாக தான் இருக்கிறார்கள். திராவிடர்கள், திராவிடர்களுக்கு ஆதரவாளர்கள் தான் இதை செய்யுறாங்க. இதுல என்ன ஆகுதுன்னா ? முன்பை விட இப்போது உற்சாகமாகவும், வெறியாகவும் எழுவதற்கு வாய்ப்பு இருக்கு. பாருங்க சும்மா படுத்து இருந்தா புலி அதுபாட்டுக்கு இருக்கும். அத அடிச்சு விட்டோம்னா… இப்ப வெறி கொண்டு திரிகிறேன் நானு.
இவர்களை ஒழிச்சிட்டு தான் டா மறு வேலை பார்க்கணும்… உங்களுக்கு தெரியுமா ? 2010 ஆம் ஆண்டு நான் பேசுனேன். எந்த பதவிக்காக நீங்கள் என் இனசாவை சகித்துக் கொண்டீர்களோ… இனி உங்கள் வாழ்நாளில் அந்தப் பதவி உங்களுக்கு ஒரு போதும் கிடைக்க விடாமல் செய்கிறேன் என்று சொன்னேன். கடைசி வரைக்கும் கருணாநிதி மறுபடியும் முதலமைச்சராக அந்த நாற்காலியில் உட்காரல.. இப்பவும் சொல்லுறேன் உங்களை ஒழிச்சுட்டு தான் நான் ஓய்வெடுப்பேன் நடக்குதா ? இல்லையா ? பாருங்க என தெரிவித்தார்.