மதுரை அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின்  சரவணன் பேசினார். இவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, அடுத்து அதிமுகவில் இணைந்து தற்போது வரை ADMKவில் தொடர்கிறார். மருத்துவராக இருக்கும் இவர் பேசுகையில், மதுரை மதுரையா இருக்குன்னா அது நம்முடைய அமைச்சர் மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் செல்லூர் ராஜு அவர்கள் கொண்டு வந்த திட்டங்களால் தான் இருக்குது.

தண்ணி கஷ்டம்:

நான் எம்எல்ஏவாக இருக்கும்போது திருப்பரங்குன்றம் தொகுதி எல்லாம் வண்டி வச்சு தண்ணி சப்ளை பண்ணிட்டு இருந்தேன். நம்முடைய அமைச்சர் அவர்கள்,  1696 கோடி திட்டத்தை அன்றைய முதலமைச்சர் ஒப்புதல் பெற்று, மதுரைக்கு நேரடியாக தண்ணீர் கொண்டு வந்திருக்காரு. இந்த திட்டத்தை திமுக அரசு காலம் தாழ்த்திக்கிட்டு இருக்கு.

கடந்த சட்டமன்றத்தின் அவையில் அமைச்சர் அவர்கள் கேள்வி எழுப்பினாரு. இன்னைக்கு  திமுக என்ன செய்து ? அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் வைக்குது. யார் பெற்ற குழந்தைக்கோ  பெயர் வைத்துக்கொண்டிருக்கு திமுக. மதுரையில் எத்தனை பாலங்கள்…  பக்கத்துல தெப்பக்குளம் இருக்கு பாருங்க. தெப்பகுளத்தில்  எப்பயாச்சும்  தண்ணிய பார்த்திருப்போமா…. நான் சின்ன பையனா இருந்தப்ப கிரிக்கெட் விளையாண்டு இருக்கேன்.

இன்னைக்கு அதுல தண்ணி இருக்கு… அதுல போட்டிங் போயிட்டு இருக்கின்றோம்.  அளவுக்கு இன்னைக்கு மீனாட்சி கோவில்ல சுத்திப்பாருங்க….  மாசி வீதிகளை பாருங்க….  எல்லாம் கல்லு பதிச்சு,  அவ்வளவு அருமையாக…. ஒளி விளக்குல மீனாட்சி அம்மனே தகதகன்னு மின்ற மாதிரி இருக்கு என தெரிவித்தார்.