திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்தாத காரணத்தினால் சென்னை முழுவதும் போராட்ட களமாக மாறி இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த  கே.எஸ் அழகிரி,

சென்னை சிங்கார சென்னையாக காட்சியளிக்கிறது. சென்னை நன்றாக தான் இருக்குது. இப்ப நான் நாலஞ்சு தெருக்கள் வழியா தான் வந்தேன்.  தெருக்களெல்லாம் நல்லாதான் இருக்கு. எங்கயுமே போராட்டம் நடக்கல.  போராட்ட களமா எங்கேயும் தெரியல. மணிப்பூர்ல தான் போராட்டக் களமாக இருக்கு. ஒரு சமயம் பிஜேபி தலைவர் அங்க போயிட்டு வந்து,  அந்த ஞாபகத்துல இதை சொல்றாரா ? என்னனு எனக்கு தெரியல, இங்க நல்லா தான் இருக்கு. 

ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் இதெல்லாம் நடக்கும். நான் என்ன சொல்ல வாரேன்.  ஒரு ஜனநாயக அமைப்புல…. அவரவர்களுடைய குறைகளை சொல்லுவதில்லை தப்பு இல்ல. அவர்கள் போராட்டம் நடத்தியது தவறு என்று யாராவது சொன்னார்களா ?  அரசாங்கம் தவறு என்று சொல்லியிருச்சா ? ஓரளவிற்கு மேல நீங்களே எழுதுவீங்க…

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததனால் அவர்கள் அகற்றப்பட்டார்கள்,  அப்படி தான் சொல்லுவீங்க. செவிலியர்களுடைய போராட்டம்…. ஆசிரியர்களுடைய போராட்டத்தில் நியாயம் இருக்கிறது.. மாநில அரசு அதனை தீர்த்து வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.  குறைபாடு இல்லாத…  குறைகள் இல்லாத துறை இருக்காது. அந்தத் துறையில் இருக்கிற குறைபாடுகளை அவர்கள் சொல்லுகிறார்கள், அரசு அதை சரி செய்யும்.

ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டத்தை  பாக்க நீங்க போறீங்கல கும்பலா. நீங்க ரோட்ல  நின்னுகிறீங்க. அதுதான் நான் இடையூறுன்னு சொன்னேன். அவங்களையா  இடையூறுன்னு சொன்னேன். நீங்கதான்,  உங்கள பார்த்த மாதிரி இருக்கு அங்க என தெரிவித்தார்.