மும்பையில் 20 வயது இளம்பெண் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தனது அந்தரங்க உறுப்பில் பிளேடு மற்றும் கற்களைத் திணித்துவிட்டதாகப் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண்ணின் உடலில் இருந்து சிசேரியன் பிளேடு மற்றும் கல் துண்டுகள் அகற்றப்பட்டன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஆனால், போலீஸாரின் தீவிர விசாரணையில் இந்தப் புகாரில் ஒரு பெரிய ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டது. அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநருடன் அர்னாலா கடற்கரைக்குச் சென்றதும், அங்கு அடையாள அட்டை இல்லாததால் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் கடற்கரையிலேயே தங்கியதும் தெரியவந்தது.

அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இரவு நேரத்தைப் பயன்படுத்தி அந்த ஓட்டுநர் அப்பெண்ணிடம் தவறாக நடந்து விட்டுத் தப்பியோடியுள்ளார். இந்த விஷயம் தெரிந்தால் தனது பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில், அந்த இளம்பெண் ஒரு மருந்தகத்தில் சிசேரியன் பிளேடு வாங்கி, தனக்குத் தானே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு போலீஸாரைத் திசைதிருப்ப நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.