கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள காலோச்சியா பகுதியில், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டருக்குள் பதுங்கியிருந்த பயங்கரப் பாம்பு, அங்கு வந்த சிறுவனைத் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டரில் இருந்த பொருட்களை எடுப்பதற்காக அந்தச் சிறுவன் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக உள்ளே இருந்த பாம்பு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து கடிக்க வந்துள்ளது. நல்ல வேளையாக, அந்தச் சிறுவன் நொடிப் பொழுதில் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து ஓடியதால், மயிரிழையில் உயிர் தப்பினார். ஸ்கூட்டரின் முன் பகுதியில் பதுங்கியிருந்த அந்தப் பாம்பின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.

“>